கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவான்டா ஹோட்டலில் சீன உணவு திருவிழா.. 10 நாட்கள் நடைபெறும் இதில்,பல்வேறு வகையான சீன உணவுகள் பரிமாறபட உள்ளன.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் ஒவ்வொரு தலைப்புகளில் உணவு கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரெட் பேர்ல் எனும் சீன உணவு திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடைபெற உள்ள இதில்,சீனாவில் உள்ள உணவகங்களில் இருப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலான வடிவமைப்புகள், இசைகளுடன் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தோசீனா உணவு சுவை போல இல்லாமல், சீனாவில் எந்த சுவையில் சமைக்கப்படுமோ, அதே உணர்வை ஏற்படுத்தும் வகையில் சீனாவை சேர்ந்த தலைமை உணவு கலைஞர் லியான் உன் லெய்ப், சீன முறைப்படி உணவுகளை தயார் செய்து காட்சிபடுத்தியுள்ளனர்..சீன வகை உணவு பிரியர்களை கவரும் வகையில் பத்து நாட்களும் சீனாவில் பிரபலமான உணவுகளான, நண்டு இறைச்சி & வெங்காய சூப், ஹுலே தாங், மிருதுவான நறுமண வாத்து, சிக்கன் சிங் காவ், டான் ஹுய் சூய் மாய், செங்டு லோட்டஸ் ஸ்டெம்,ப்ரைடு ரைஸ்,தாய் சின் சிக்கன், உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு உணவு வகைகள் பரிமாற உள்ளதாகவும், பொதுவாக கோவை மக்கள் சீன உணவு மீது ஆர்வம் காட்டுவதால் இந்த உணவு திருவிழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
சீன உணவு வகைகளை ருசிப்பதற்கான இந்த பேர்ல் உணவு கண்காட்சி சீன உணவு பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.