fbpx
Homeபிற செய்திகள்செவிலியர்களுக்கு பாதுகாப்பான ஊசியை எச் எம் டி அறிமுகம்

செவிலியர்களுக்கு பாதுகாப்பான ஊசியை எச் எம் டி அறிமுகம்

ஹிந்துஸ்தான் சிரிஞ்சிஸ் அண்ட் மெடிக்கல் டிவைசஸ் (HMD), பாதுகாப்பு ஊசியுடன் கூடிய அதிநவீன டிஸ்போ ஜெக்ட் ஒற்றை பயன்பாடு சிரிஞ்சை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வித ஊசி முதலாவதாக செவிலியர் களுக்கு நீடில் ஸ்டிக் காயங்களிலிருந்து(NSIs) பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது.

எச்.எம்.டி வழங்கும் டிஸ்போஜெக்ட் சிரிஞ்சிகள் உலக செவிலியர் தினத்தில் செவிலியர்களின் விடாமுயற்சி மற்றும் மீண்டெழும் தன்மைக்கு பொருத்தமாக அமைகிறது.
உலகளாவிய செவிலியர் பணியாளர்கள் சமூகம் தோராயமாக 27 மில்லியன் ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண் டதாகும். இது உலக மருத்துவ பணியாளர்களில் ஏறத்தாழ 50% ஆகும்.

இது குறித்து எச்.எம்.டி நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜீவ் நாத் கூறுகையில்,
“உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிடத்தக்க அளவில் நீடில் ஸ்டிக் காயங்களின் ஆபத்தை எதிர்கொள்வது, ரத்தத்தில் பரவும் நோய்க்கிருமிகளின் வெளிப்பாட்டின் காரணமாக கடுமையான உடல் நல அபாயத்தை ஏற்படுத் துகிறது. டிஸ்போ ஜெக்ட் சிரிஞ்ச்கள், நம்மைக் கவனித்துக் கொள்பவர்களை திறம்பட கவனித்து க்கொள்வதில் உள்ள இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img