பிரிட்டிஷ் ஆட்டோ மொபைல் பிராண்டான MG 110 ஆண்டுகளுக்கும் மேலான பிரிட்டிஷ் பந்தய வரலாற்றின் அடையாளமான ‘எவர் கிரீன்’ வண்ணத்தை உள்ளடக்கிய ‘100-வருட லிமிடெட் எடிஷனை’ அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் MG ஹெக்டர் ரூ.21,19,800க்கும், MG ZS EV ரூ.24,18,000க்கும், MG Astor ரூ.14,80,800க்கும் மற்றும் MG காமெட் 9,39,800க்கும் கிடைக்கும்.
இந்தப் பதிப்புகள் ‘எவர்கிரீன்’ வெளிப்புறத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த பிளாக் ஃபினிஷ்டு ரூஃபட் மற்றும் டெயில் கேட்டில் ‘100-ஆண்டு பதிப்பு’ பேட்ஜுடன் டார்க் ஃபினிஷ்ட் எலிமென்ட்களுடன் வரும்.
கூடுதலாக, உட்புறம் முழுக்க முழுக்க கருப்பு தீம் கொண்டது. மேலும் விட்ஜெட் நிறத்துடன் ‘எவர்கிரீன்’ தீம் ஹெட் யூனிட்டுடன் வரும். இது குறித்து, MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி சதீந்தர் சிங் பஜ்வா கூறுகையில், ‘’எவர்கிரீன்’ நிறம் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, இது பிராண்டை வரையறுக்கும் செயல்திறன் மற்றும் பாரம்பரியத்தின் உணர்வை உள்ளடக்கியது’’ என்றார்.