ஊட்டியில் நடந்த டெர்பி குதிரை பந்தயத்தில் ராயல் டிபண்டர் குதிரை வெற்றி பெற்றது.
ஊட்டியில் கோடை விழாவை ஒட்டி மெட் ராஸ் ரேஸ் கிளப் சார்பில், ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத் தில் குதிரை பந்தயம் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வருகிறது.
நேற்றைய குதிரைப் பந்தயத்தில் ,7 போட்டிகள் நடந்தது. முக்கிய பந்தயமான டெர்பி பந்தயம் நடந்தது. 1600 மீ., இலக்கை நோக்கி, 11 குதிரைகள் ஓடின. இதில், ராயல் டிபண்டர் குதிரை, 1:41.89 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இரண்டாவதாக, திஸ் ஈஷ் கோல்டு குதிரை, 1:42.83 நிமிடம், முன்றாவதாக, கிரே விண்ட், 1:43.18 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குதிரைகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், மொத்த பரிசு தொகை, 77 லட்சம் ரூபாயில், முதல் பரிசு தொகையாக, குதிரையின் உரிமையாளருக்கு கோப்பை மற்றும் 38 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய், பயிற்சியாளருக்கு 4 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய், ஜாக்கிக்கு, 3 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த குதிரைக்கு 14 லட்சத்து 61 ஆயிரத்து 75 ரூபாய், மூன்றாம் இடம் பிடித்த குதிரைக்கு, 6 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பிடித்த குதிரைக்கு, 3 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரை பந்தய ஆர்வலர்கள் பந்தயத்தை கண்டுகளித்தனர்.