fbpx
Homeபிற செய்திகள்கோவை மருதம் கோ-ஆப் டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை

கோவை மருதம் கோ-ஆப் டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை

கோவை வ.உ.சி ஸ்டேடியத்தில் உள்ள மருதம் கோ ஆப் டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா இன்று (21-ந்தேதி) நடை பெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

விழாவில் கோ-ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், ரகம் மற்றும் பகிர்மான முதுநிலை மேலாளர் ஜெகநாதன், முன்னாள் மண்டல மேலாளர் சுரேஷ், கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன்ராஜ், கோ&ஆப் டெக்ஸ் பிஆர்ஓ நடராஜ், கிளை மேலாளர் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கோ&ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால் கூறியதாவது:- தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக இந்தியா முழுவதும் உள்ள கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு விற்பனை நிலையங்கள் மூலம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு புதிய வடிவமைப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ரெடி மேட் சட்டைகள் ,சுடிதார் ரகங்கள் உட்பட ஏராளமான ஆடை ரகங்கள் குவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது
மேற்கண்டவாறு அவர் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img