கோவை அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியில் நம் தேசம் நம் பெருமை அமைப்பு சார்பாக இந்து தேசத்தின் ஹிந்துக்கள் என்ற நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டனர்.
டாக்டர் ஆனந்த் ரங்கநாதன் எழுதியHindus in Hindu Rashtra என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் என்ற பெயரில் வெளியி டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ராம் ஸ்ரீனிவாசன் மற்றும் நூலின் ஆசிரியர் ஆனந்த் ரங்கநாதன் கலந்து கொண்டனர்.
இதில் தலைமை விருந்தினர் எம்.கிருஷ்ணன் நூலை வெளியிட்டதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ராம் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். இந்த நூல் ஒரு சாதாரண அரசியல் விமர்சன நூல் இல்லை.
மேலும் இது விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் நாகரிக மறுமலர்ச்சிக்கான அழைப்பு என்றும் விமர்சிக்கப் பட்ட இந்த நூலில் சுதந்திர இந்தியாவில் ஹிந்துக்களின் நிலை என்ன? அரசியலமைப்புச் சட்டங்கள் ஹிந்துக்களின் உரிமைகள், மரபுகள், ஆலயங்களை எவ்வாறு அணுகுகின்றன என்றும் சமத்துவத்தின் பெயரில் ஏதேனும் பாகுபாடுகள் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் பல்வேறு விஷயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளது.



