fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

சிதம்பரம் ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியில், சுகாதார வளாகம் (கழிவறை) திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி குழுத்தலைவர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பள்ளிக்குழுச் செயலாளர் டாக்டர் அருள் மொழிசெல்வன் வரவேற்றுப் பேசினார்.


சுகாதாரக் கழிவறை கட்டிட மேம்பாட்டிற்கு உதவி செய்த தஞ்சை மதர் தெரசா பவுண்டேஷன், மற்றும் நன்கொடைஅளித்த அமெரிக்கா ரொ.ஜூலி கிரேக், பாண்டிச்சேரி ரோட்டேரி நண்பர்கள் மற்றும் பொறியாளர் சரவணன் ஆகிய அனைவருக்கும் நினைவு பரிசளித்து பாராட்டப்பட்டனர்.


சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி ஆளுனர் ஏ.ஜோசப் சுரேஷ்குமார் சுகாதாரக வளாகம் மற்றும் கழிவறையை திறந்து வைத்து ரோட்டரி கொடையாளர்களை பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராம்குமார் நன்றி கூறினார்.

நிறைவாக பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியின் பெற்றோர் பள்ளியின் முன்னாள் மாணவர் பள்ளிக்கு 6 மின்விசிறிகளை வழங்கினார். நிகழ்ச்சிகளை பள்ளியின் ஆசிரியை எம்.அகிலா தொகுத்து வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img