fbpx
Homeபிற செய்திகள்ஹெச்.சி.எல் பவுண்டேஷனின் மாற்றத்திற்கான விளையாட்டு போட்டி

ஹெச்.சி.எல் பவுண்டேஷனின் மாற்றத்திற்கான விளையாட்டு போட்டி

ஹெச்.சி.எல் ஃபவுண்டேஷன், சென்னை ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் கல்லூரியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான மாற்றத்திற்கான விளையாட்டு தேசிய இறுதிப் போட்டியின் 7வது பதிப்பை தொடங்குவதாக அறிவித்தது.


இந்த நிகழ்வில் பத்மஸ்ரீ பிரம்மாண்ட விருதுநாயகர் அச்சந்த சரத் கமல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


இந்த ஆண்டு நடைபெற்ற மாற்றத்திற்கான விளையாட் டுப் போட்டி இந்தியா முழுவதிலுமிருந்து 12,256 இளம் விளையாட்டு வீரர்களை ஒன்றிணைத்தது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், நாகாலாந்து உள்ளிட்ட 14 மா

நிலங்களிலிருந்து சிறந்த செயல்திறன் கொண்ட 758 குழந்தைகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஐந்து மாநில கூட்டமைப்புகளுக்கு 131 கூடைப்பந்து சக்கர நாற்காலிகள் விநியோகிக்கப்பட்டதன் மூலம் உள்ளடக்கிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது.


இது குறித்து ஹெச்.சி.எல். ஃபவுண்டேஷனின் இயக்குனர் டாக்டர் நிதி பந்திர் கூறுகையில், “ஹெச்.சி.எல் ஃபவுண்டேஷன் வசதி குறைந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, திறனை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவுகிறது” என்றார்.


இன்று வரை, இந்த முயற்சி 64,000க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்களுக்கு நேர்மறையான தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

படிக்க வேண்டும்

spot_img