தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறந்த செயல்பாடான கூட்டுறவே நாட்டு உயர்வு என்ற கொள்கைக்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு கிடைக்ககூடிய நன்மைகள் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான நடுக்காட்டுராஜா, பொதுமேலாளர் சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் விஜயன், உதவி பொது மேலாளர் சீனிவாசன், உதவி பொது மேலாளர் பூமி செல்வி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி பேரணியை கொடி அசைந்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியானது எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து எட்டையாபுரம் ரோடு புதிய பேருந்து நிலையம் வழியாக குருஸ்பர்ணாந்து சிலை, பால விநாயகர் கோவில் தெரு, காய்கனி மார்க்கெட் அண்ணா சிலை ரவுண்டானா, ராஜ் ஹோட்டல், பக்கில் ஓடை ரோடு நான்காம் கேட் வழியாக பேரணியாக வந்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் முடிவுற்றது.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகள், வியாபாரிகள், மகளிர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கடன் உதவிகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வழங்கி வருகிறது என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.