பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகனப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாக ஜி.ஆர்.ஜி ஈ வால்வ் ஹப் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். நந்தினி தலைமை தாங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், டி.என். ஆட்டோ ஸ்கில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் தொடக்க உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மேலும் டாக்டர். ஜெயந்தா மித்ரா மூத்த உறுப்பினர் TERI, சீனிவாஸ் குமார் சர்வதேச மின்சார வாகன சங்கங்களின் கூட்டமைப்பு,
சுதாகர் நிர்வாக இயக்குநர் இ-ராய்ஸ் மோட்டார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
கலைவாணி நீலகண்டன், நிர்வாக இயக்குநர் WIEV எனர்ஜிக் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செயலாளர் டாக்டர் என். ஏசோதா தேவி, இயக்குனர், டீன்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெண்கள் பயனாளிகளும் உற்சாகமாக பங்கேற்றனர். நிறைவாக முதல்வர் டாக்டர் பி.பி. ஆரத்தி நன்றியுரை வழங்கினார்.



