Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்கள்: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகள் தேர்வு

மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்கள்: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகள் தேர்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் சிக்கதாசம்பாளையம், ஜடையம் பாளையம், பெள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

இதில் பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 20 நபர்கள் விதிமுறைகளின் படி தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தின் போது கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு ரூபாய் 3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணியாணையை ஊராட்சி தலைவர் சிவக்குமார் வழங்கினார். மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள மோத்தேபாளையம் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட் டம் ஊராட்சி மன்ற தலைவர் மாலா(எ) விமலா தலைமையில் நடைபெற்றது.

இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி துணைத்தலைவர் வினோத், செயலாளர் பிரபு மற்றும் பொது மக்கள் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்
மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள ஜடையம்பாளையம் பகுதி யில் சிறப்பு கிராம சபை கூட் டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் நந்தினி மற்றும் பொது மக்கள் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img