Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான போதை பொருட்களை முழுமையாக தடுத்து, நாளைய சமூகத்தை நல்லதொரு சமூகமாக உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அறக்கட்டளையோடு இணைந்து தொடர் போதை விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது.

பழையகாயல், கோரம்பள்ளம், முத்தையாபுரத்தை தொடர்ந்து தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி குரூஸ்புரத்தில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட் டமைப்பு நிறுவனத் தலைவரும், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வம், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக சாமுவேல்புரம் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ருஃபினா ரொட்ரிகா அனை வரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் தி.கலைச்செல்வி திலகராஜ் கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியானது மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் இருந்து புறப்பட்டு குரூஸ்புரம் ரவுண்டானா,சந்தனமாரியம்மன் கோவில், குரூஸ்புரம் பிரதான சாலை வழியாக பள்ளியை சென்றடைந்தது.

இப்பேரணியில் உதவி தலைமை ஆசிரியர் ஆர்.கிரேஸ் கெத்ஸிபாய், அய்யனடைப்பு முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஆ.ஆதிநாராயணன், துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ்.தனலெட்சுமி, பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை நிர்வா கிகள் தா.முருகேஸ்வரி, ஏரல் ஏ. புஸ்பவேணி, எல் பாஸ் சமூகசேவை அறக்கட்டளை இயக்குனர் ராஜ்கமல் மற்றும் நூற்று ஐம்ப துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக பள்ளியின் தமிழ் ஆசிரியர் எஸ்.கோகிலாவாணி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பீ. லூமினா பர்னான்டோ மற்றும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி கள் செய்து இருந்தனர்.

பேரணி முடிவில் போதைப் பொருட்களின் புகைப்படங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்து, அனைவரும் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத் துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img