fbpx
Homeபிற செய்திகள்மோடி தலைமையில் மீண்டும் நல்லரசுஉருவாக வேண்டும்: ஜி.கே.வாசன் பிரசாரம்

மோடி தலைமையில் மீண்டும் நல்லரசுஉருவாக வேண்டும்: ஜி.கே.வாசன் பிரசாரம்

பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக இந்தியாவில் நல்லரசு மலர வேண்டும் அதற்கு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரான விஜயகுமார் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரத்தை மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி கே வாசன் கோரிக்கை விடுத்த. அவர் விஜயகுமாரை ஆதரித்து வீரப்பன்சத்திரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்

அப்போது ஜி.கே.வாசன் பேசியதாவது: வளமான தமிழகம் வலிமையான பாரதம் அமைய மோடி தலைமை வேண்டும். மத்தியில் வலிமையான வலிமையான ஆட்சி வேண்டும். மூன்றாவது முறை பாரத பிரதமரின் நல்லாட்சி மலரும். இந்தியாவை வல்லரசாக மாற்றும் தலைமை தேவை. இந்திய நாட்டின் பொருளாதாரம் மேலும் உயர வேண்டும், நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அதற்கு ஒரே தலைமை ஆளுமை பெற்ற தலைமை மோடி தான் என்பதை மனதில் வைத்து சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க மக்கள் முன் வர வேண்டும் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இத்தொகுதியின் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அவர் பேசினர்.

தமாகா முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா உட்பட பலர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img