இந்தியன் ஹோட்டல் நிறுவனம் (IHCL) ஆனது அவிநாசி சாலையில் கோவை விமான நிலையம் அருகில் பெருமைக்குரிய ஜின்ஜர் ஹோட்டலை திறந்துள்ளதை அறிவித்துள்ளது. இந்த ஹோட்டலானது பிராண்டின் சிக்னேச்சர் உடன் கலந்த ஆடம்பரமான தத்துவத்தை கொடுள்ளது. அதோடு, விருந்தினர்களுக்கு சமகால டிரெண்டையும் மற்றும் தங்குவதற்கு ஏற்ற வசதியையும் வழங்குகிறது. சிறப்புக்குரிய இந்நிகழ்வு குறித்து IHCL நிறுவனத்தின் புதிய வணிகங்கள், ஹோட்டல் திறப்புகள் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றின் நிர்வாக துணைத்தலைவரான தீபிகா ராவ் பேசுகையில், “கோயம்புத்தூரில் சிறப்புமிக்க ஜின்ஜர் துவக்கமென்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது.
மேலும், இது ஆடம்பரத்தின் அடையாளம். நகர்த்திற்கு வரும் பெரு நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்“ என்றார். இந்த ஹோட்டலானது கோவை விமான நிலையத்திற்கு அருகே அமைந்திருப்பது மிகவும் வசதியானதாகும். தவிர, டைடல் பார்க், கொடிசியா வர்த்தக மையம் போன்ற முக்கிய வணிக மாவட்டங்களுக்கு அருகாமையில் உள்ளது கூடுதல் சிறப்பு.