ஆஷியானாவின் 3வது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது. ஆஷியானா ஹவுசிங் லிமிடெட், அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் உடன் இணைந்து, ஸ்வரங் என்னும் அதிநவீன முதியோர் குடியிருப்பு திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்னையில் ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமாகும்.
இந்த புதிய குடியிருப்பு திட்டம் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் 10.87 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
ஸ்வரங்கிற்கான நிலப்பரப்பு கட்டிடக்கலை நன்கு அறியப்பட்ட சவிதா பூண்டேவால் செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன திட்டம், நடை கால்பந்து, டென்னிகாய்ட், குரோக்கெட் மற்றும் அக்வா தெரபி போன்ற விளையாட்டு வசதிகள் உட்பட அதன் விரிவான வசதிகளுக்காக தனித்து நிற்கிறது.
முழு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், வழிபாட்டு இடம் மற்றும் வழக்கமான சமூக நிகழ்வுகள் ஆகியவை துடிப்பான சமூக வாழ்க்கைக்கு பங்களிக்கின்றன. 24 மணிநேரமும் பாதுகாப்பு அலுவலர்கள், செயலி அடிப்படையிலான வாசற்கதவு உட்பட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்கிறது.