நுகர்வோர் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ரெக்கிட் (Reckitt), அதன் கேவிஸ்கான் பிராண்டின் கீழ், தமிழ்நாட்டில் கேவிஸ்கான் டபுள் ஆக்ஷனை அறிமுகப்படுத்தியது.
இது நுகர்வோருக்கு ஆசிட் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு தீர்வை வழங்குகிறது.
ரெக்கிட் இந்தியாவைச் சேர்ந்த கேவிஸ்கான் நிறுவனமானது அமிலப் பின்னோட்ட நோய் அல்லது ரிஃப்ளக்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கான தீர்வாக, தமிழகத்தில் கேவிஸ்கான் டபுள் ஆக்ஷனை அறி முகப்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, மதிப்புமிக்க நிபுணர்களுடன் கேவிஸ்கான் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.
ரிஃப்ளக்ஸ் பிரச்சனையைப் பற்றி பேராசிரியர் டாக்டர் பீட்டர் கஹ்ரிலாஸ் (கில்பர்ட் ஹெச். மார்க்வார்ட், மருத்துவப் பேராசிரியர்), வடமேற்கு பல்கலைக் கழகம், ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் டாக்டர் பாலி ஹங்கின், மருத்துவ அறிவியல் எமரிட்டஸ் பேராசிரியர், நியூகேஸ் டில் பல்கலைக்கழகம் ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழு விவாதமும் நடைபெற்றது.
நிபுணர் குழு விவாதத்தின்போது, ‘வயிறு/மார்பில் எரியும் உணர்வு, அசௌகரியம் மற்றும் புளிப்புச் சுவை அல்லது உணவு மேல் எழுவது போன்ற அறிகுறிகள் ரிஃப்ளக்ஸின் அறிகுறிகளாகும். இந்த ரிஃப்ளக்ஸை திறம்பட நிர்வகிப்பது மிக முக்கியமாகும்.
அதற்கு இரண்டு விதங்களை பின்பற்றலாம். அதாவது, அறிகுறிகளுக்கு பங்களிக்கும் அமில த்தைத் தணிப்பது மற்றும் வயிற்றில் ரிஃப்ளக்ஸை அடக்குவதற்கு உடல் ரீதியாக தடையை ஏற்படுத்த வேண்டும்.
ரிஃப்ளக்ஸின் முழு அறிகுறிகளைப் புரிந்துகொள்வது மற்றும் தொடர்புடைய மேலாண்மை உத்திகளைப் பயன்படுத்துவது நோயாளியின் பராமரிப்பை கணி சமாக மேம்படுத்தும்’ என்று கூறப் பட்டது.