fbpx
Homeபிற செய்திகள்பிசியோதெரபி கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா

பிசியோதெரபி கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் 37வது வருட BPT (இளங்கலை) மாணவர் சேர்க்கை மற்றும் 26வது வருட MPT முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்கவிழா ஸ்ரீமதி. வேலுமணியம்மாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஇஓ சி.வி.ராம்குமார், டாக்டர் எஸ்.ராஜகோபால் (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) மருத்துவ இயக்குநர், டாக்டர் எஸ். அழகப்பன் எம்.டி., (மருத்துவர்), மருத்துவ கண்காணிப்பாளர், ஆகியோர் பங்கேற்று சிறப்புரை சிறப்புரை ஆற்றினார்கள்.

கல்லூரி முதல்வர், பேராசிரியர் வி.எஸ். சீதாராமன் வரவேற்புரை ஆற்றினார். அவர், பிசியோதெரபியின் பலவிதமான சிகிச்சை முறைகள் மற்றும் நுட்பங்களை பற்றி எடுத்துரைத்தார்.

எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஇஓ சி.வி.ராம்குமார் பேசுகையில் அறக்கட்டளையின் செயல்பாடுகளை விவரித்தார். எங்களுடன் சேர முடிவு செய்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை அவர் பாராட்டினார்.

டாக்டர்.எஸ். ராஜகோபால் பேசுகையில் மாணவர்களை வரவேற்று பிஸியோதெரபியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இதில், பிசியோதெரபி என்பது உடல்நலப் பாதுகாப்புக்கான முழுமையான அணுகுமுறையாகும், இது உள்மருந்துகளை விட உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறது என்று வலியுறுத்தினார்.

முன்னதாக பிரார்த்தனை பாடல் பாடியும் குத்துவிளக்கேற்றியும் விழா தொடங்கப்பட்டது. வரவேற்பு நடனம், மருத்துவமனை பற்றிய குரும்படம் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன-.
பேராசிரியர் ஆர்.பொற்கொடி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img