fbpx
Homeபிற செய்திகள்பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அரசியல் ஆதாயம் அடைவது நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம்: கனிமொழி எம்.பி.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அரசியல் ஆதாயம் அடைவது நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தொழில் களம் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நேற்று (29ம் தேதி) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், முதல் தவணையாக 3 பேருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவியை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களின் புதுமையான தொழில் முயற்சிகளை ஊக்கு விக்கும் வகையிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், ‘புத்தொழில் களம்‘ என்னும் போட்டி அன்று (5 ஏப்ரல் 2025) நடைபெற்றது.

ஒவ்வொருவரும் முன்வைத்த புதுமையான தொழில் சிந்தனைகள் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைத்த நிலையில், நிகழ்வின் முடிவில் கோவில்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தானேஷ் கனகராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் காஸ்கேரினோ ஆகியோர் தொழில் முன்மொழிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி, 4 கட்டங்களில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி கூறியதாவது:
கடந்த மாதம் நடைபெற்ற புத்தொழில் களம் மூலமாகப் பல இளைஞர்கள் தொழில் முனைவர் தொழில் தொடங்குவதற்கு உதவி செய் யக்கூடிய முன்னெடுப்பை செய் துள்ளோம்.


அதன் மூலம், மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10 லட்சம் நிதி என்று முதல் தவணையாக 3 பேருக்கு தலா ரூ.2 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர்கள் ஏறத்தாழ புத்தொழில் களத்திற்கு 400 பேர் விண்ணப்பம் செய் துள்ளனர், சிலரை மறுபடியும் அழைத்துள்ளோம்.


அரசு கொண்டு வர கூடிய திட்டங்கள் வழியாகவும், வங்கிகள் வழியாக உதவி செய்வதற்கு உறுது ணையாக இருப்பதற்காக அதன் மூலமாக அவர்கள் தொழிலை தொடங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


மேலும், பஹல்காம் தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தியதால் எல்லோரும் மிகப்பெரிய அள வில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி அளிக்கக்கூடிய மிகப் பெரிய சோகமான நிகழ்வு. அதனை அரசியல் ஆக்கக்கூடிய சூழலைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒன்றிய அரசாங்கம் இதை வேறு திசைக்கு திருப்பக்கூடிய ஆபத்தான சூழலை உருவாக்கி வருகிறார்கள். ஒன்றிய அரசிடம் உள்ள தோல்விகளை ஏற்றுக்கொண்டு, அதனைச் சரி செய்ய வேண்டும்.


அதை சரி செய்யாமல், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.


தாக்குதல் நடைபெறும் போது அதனை அரசியல் ஆக்கி, அதன் மூலமாக ஆதாயம் அடைவதையும், சில சூழ்நிலைகளை உருவாக்குவது. இது எல்லாம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பங்கமாக மாறிவிடும் என்பதை யாராக இருந்தாலும் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img