fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ரூ.750 கோடியில்   ஜி ஸ்கொயரின் தி ரெசிடென்சி  திட்டம் அறிவிப்பு

கோவையில் ரூ.750 கோடியில்   ஜி ஸ்கொயரின் தி ரெசிடென்சி  திட்டம் அறிவிப்பு

ஜி ஸ்கொயர் கோவையில் தனது புதிய முதன்மை திட்டமான ‘ஜி ஸ்கொயர்- தி ரெசிடென்சி’  என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இது குறித்து ஜி ஸ்கொயரின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜயம்  கூறுகையில், “சுமார் 16.3 ஏக்கர் பரப்பளவில்,  ரூபாய்.750 கோடி மதிப்பிலான இந்த ஆடம்பர சொகுசு மனைத்திட்டம், வர்த்தக மற்றும் குடியிருப்பு தேவைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜி.வி ரெசிடென்சிக்கு நேர் எதிரே  அமைந்துள்ளது. கோவை மாநகரின் ப்ரீமியம் நில மதிப்பை மறுவரையறை செய்யும் வகையில், ஜி ஸ்கொயர் இந்தத் திட்டத்தை மிகச்சிறந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஜி ஸ்கொயர் – தி ரெசிடென்சி’ திட்டத்தின் அறிமுகச் சலுகையாக, தற்போதைய சந்தை விலையை விட 30%-க்கும் குறைவாக, ஒரு சென்ட் ரூபாய்.39.9 லட்சம் என நிர்ணயித்துள்ளது. 

தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்த இடத்தின் மதிப்பு குறுகிய காலத்தில் 2 மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி ஸ்கொயரின் ‘தி ரெசிடென்சி’ திட்டம் மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள், அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையை மிக எளிதில் சென்றடைய முடியும். மேலும், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், நகர ரயில் சந்திப்பு, ஃபன் மால் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை போன்ற முக்கிய இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை வெறும் 5 நிமிடங்களில் சென்றடையும் வகையில் மிகப் பிரதான இடத்தில் இது அமைந்துள்ளது. 

படிக்க வேண்டும்

spot_img