சென்னை ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனை அரிய முறை இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு சவுதி நாட்டவரின் உயிரை காத்துள்ளது.
ஆர்டிக் வால்வு அறுவை சிகிச்சை (வால்வு மற்றும் வால்வு TAVR) செய்துகொண்ட ஒரு நோயாளியின் ஆர்டிக் வால்வை மாற்றுவதற்கு, ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் இருதயவியல் குழு மருத்துவர்கள், சமீபத்தில் ஒரு விதிவிலக்கான அரிதான கீஹோல் செயல்முறையை செய்தனர்.
கீஹோல் அறுவை சிகிச்சை வழக்கமானது என்றாலும், 2010ல் செய்யப்பட்ட ஒரு ஹோமோ-பென்டால் அறுவை சிகிச்சையில் இருந்து ஏற்கனவே உள்ள வால்வு மற்றும் செயற்கை தமனி இரண்டும் இருப்பதால் இந்த சிகிச்சை மிகவும் அரிதானது.
பொதுவாக, TAVR குறுகிய வால்வுகளுக்கு செய்யப்படுகிறது. ஆனால் சவுதி நாட்டை சேர்ந்த நோயாளியின் விஷயத்தில் இந்த வால்வு கடுமையாக கசிந்தது. சிறப்பான அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி இரண்டு நாள்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அடுத்த நாள் டிரெட்மில்லில் லேசான உடற்பயிற்சியை மீண்டும் தொடங்கினார்.
டாக்டர் கே.எம். செரியனால் நிறுவப்பட்ட ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனை, இருதய அறுவை சிகிச்சை மற்றும் மேம்பட்ட இருதய சிகிச்சை சேவையில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது.
மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் அஜீத் அருள்குமார் கூறுகையில், “ஃபிரான்டியர் மருத்துவமனை சிக்கலான சிகிச்சைகளை நிர்வகிப்பதில் சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்த மருத்துவமனை காப்பீடு இல்லாத நோயாளிகளும் கணிசமாக குறைக்கப்பட்ட கட்டணத்தில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை வழங்குகிறது” என்றார்.