ஓர் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாட்டின் முன்னணி எஃப்எம்சிஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா நியூட்ரிலைட் டெய்லிபிளஸ் என்ற புதிய மல்டி வைட்டமின் – மல்டி மினரல் ஆரோக்கிய கூடுதல் உணவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் 24 இன்றியமையாத வைட்டமின்களும் தாதுக்களும், இருமடங்கு தாவரச்செறிவுகளின் ஆற்றலும் அடங்கியுள்ளது.
ஆம்வேயின் தயாரிப்புகளில் இரட்டை அடுக்கு இரட்டை வெளியீடு என்ற திருப்புமுனை கண்டுபிடிப்புடன் வரும் முதல் தயாரிப்பு நியூட்ரிலைட் டெய்லிபிளஸே ஆகும். மனஅழுத்தத்தை குறைக்கும் பண்புகள் கொண்ட வல்லாரை எனும் வலிமைமிக்க மூலப்பொருள் நியூட்ரிலைட் டெய்லியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்வே இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அஜேய்கன்னா கூறியதாவது: அன்றாட நேரமற்ற வாழ்க்கை முறை, பணிஅழுத்தம், குறைந்த உடல் செயல்பாடுகளினால் 74% இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, ஊட்டச்சத்து ஆதரவுடன், மனஅழுத்த மேலாண்மை கூடுதல் உதவியாக இருக்கும். நியூட்ரிலைட் உலகின் நம்பர் 1 வைட்டமின்கள், கூடுதல் உணவு பிராண்ட் ஆகும்.
நியூட்ரிலைட் டெய்லி பிளஸ் அதிக அளவு தாவரச்செறிவு கொண்ட மல்டி வைட்டமின், மல்டி மினரல் அடங்கிய ஆரோக்கிய உணவாகும். மன ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சக்தி வாய்ந்த வல்லாரையின் நற்குணங்கள் இதில் உள்ளன.
30 மற்றும் 120 மாத்திரைகள் அடங்கிய பேக்கில் நியூட்ரிலைட் டெய்லிபிளஸ் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.849 – ரூ.2,796 ஆகும். இந்தியா முழுவதும் ஆம்வே நேரடி விற்பனை பார்ட்னர்கள் மூலமே இது கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.