நல்ல கல்வி கொடுப்பது தான் உலகில் தலைசிறந்த சேவையென உணர்ந்து நிறுவனர் மற்றும் தாளாளர் முனைவர் கே.சிவசாமி, 1998 ஆம் ஆண்டு ப்ரண்ட்லைன் பள்ளியைத் துவங்கினார்.
உலகத் தரத்திலான சிறந்த கல்வியை வழங்கியதன் மூலம் இன்று ஃப்ரண்ட்லைன் பள்ளி களில் 2,200க்கும் அதிகமான மாணவர்களுடன் 250 ஆசிரி யர்கள் மற்றும் 150க்கும் அதிக மான அலுவலர்களுடன், தி ஃப்ரண்ட்லைள் அகாடமி மெட் ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஃட்ரண்ட்லைன் மில்லினியம் (சி.பி.எஸ்.சி) பள்ளி மற்றும் ஃட்ரண்ட்லைன் நியுஜென் இன்டர்நேஷனல் பள்ளி என 3 பெரும் கிளைகளுடன் திருப்பூ ரின் புதிய அடையாளமாக திகழ்கிறது.
தற்பொழுது பள்ளிக ளின் செயலாளர் டாக்டர் எஸ்.சிவகாமி, இயக்குனர் எஸ்.சக்திநத்தன் மற்றும் இணைச் செயலாளர் எஸ்.வைஷ்ணவி நந்தன் ஆகியோரின் சிறப்பான நிர்வாகத்தில் வெற்றிநடை போடும் ப்ரண்ட்லைன் பள்ளிகள், தமது 25 ஆம் ஆண்டு விழாவை உலகில் யாருமே செய்திராத வகையில் மிக பிரம்மாண்டமாக 50 உலக சாதனைகளைப் படைத்து கொண்டாடியது.
“ப்ரண்ட்லைன் உலக சாதனைகள் திருவிழா 2023” எனும் பெயரில் ஜூலை 20 முதல் 30ஆம் தேதிவரை 11 நாட்களில் 25 குழு உலக சாதனைகள் மற்றும் 25 தனிநபர் உலக சாதனைகள் என மொத்தம் 50 உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
இந்த சாதனைகளை எலைட் வேல்டு ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவ னங்கள் நேரில் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கி கௌரவித்தனர்.
சாதனை நிகழ்வுகளை பள்ளிக ளின் தாளாளர், செயலாளர் முன்னின்று நடத்த, இயக்குநர் மற்றும் இணைச்செயலாளர் மேற் பார்வையிட தி ப்ரண்ட்லைன் அகாடமி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் என்.வசந்தராஜ், ப்ரண்ட்லைன் மில்லினியம் (சி.பி.எஸ்.சி) பள்ளியின் முதல்வர் எம்.லாவன்யா மற்றும் ப்ரண்ட்லைன் நியுஜேன் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் ஆர்.ஷியாமளா தேவி ஆகியோர் கண்காணிப்பில் பள்ளி மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களுடன் இணைந்து செயல்படுத்தி புதிய உலக சாதனை வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்தினர்.
30.07.2023 நடைபெற்ற உலக சாதனை சான்றளிப்பு விழா நிகழ்வில் எலைட வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” உலக சாதனை நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சீப் ஆப்பரேஷன்ஸ் ஆபிஸர் (சி.இ.ஓ) டாக்டர்.ரபி பால்பாக்கி, சீஃப் எக்ஃஸிக்யூட்டிவ் ஆபிஸர் (சி.இ.ஓ) லா திய்ன் பொ. அம்பாஸிடர் & அட்ஜுடிகேட்டா டாக்டர்.நௌரா மெராபி, ஏஷியா பசிஃபிக் அம்பாஸிடர் – அடநாடிகேட்டர் டாக்டர் ஜவஹர் கார்த்திகேயன், சீனியர் அட்ஜுடிகேட்டர் அமீத் கே.ஹிங்கோரனி, அடஜுடி கேட்டர் டாக்டர். சத்யஸ்ரீகுப்தா – பாவனா ராஜேஷ், டாக்டர் ஹனீஃபா பானு ஜியாவுதீன் – அர்ச்சனா ராஜேஷ் மற்றும் ரக்க்ஷிதா ஆகியோர்களும், ஏஷியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவன ஆய்வா ளர்கள் ஹுசைன் அயூப், அம் பாஸிடர் – அட்ஜுடிகேட்டர் மருத்துவர் ஏ.கே.செந்தில்குமார், அடஜுடிகேட்டர் டாக்டர் .சிவக்குமரன், உஷா நந்தினி – பி.ஜி.ப்ரதீபா, “இந்தியா ரெக் கார்ட்ஸ் அகாடமி” உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் பி.ஜெகநாதன், ரெக்கார்ட்ஸ் மேனேஜர் கே.ஆர்.வெங்கடேஸ்வரன் & டாக்டர்.எல்கின் ஏ.ஏரோஸ், டாக்டர் டி.ஜி.ஜமுனாராணி ஆகியோர்களும், “தமிழன் புக் ஆஃப் ரெக் கார்ட்ஸ்” உலக சாதனை நிறுவன பதிவு மேலாளர் யு.நாகஜோதி, ஆய்வுப் பயிற்சியாளர்கள் ஆர்.உமாபதி – கே.என்.சக்திவேல் அவர்களும் நேரில் வருகை தந்து, 25 தனிநபர் மற்றும் 25 குழு உலக சாதனை சான்றிதழ்களையும் இந்த மாபெரும் உலகசாதனை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்ட தாளாளர் முனைவர் கே.சிவசாமி, செயலாளர் டாக்டர் எஸ்.சிவகாமி, இயக்குநர் எஸ்.சக்திநந்தன் மற்றும் இணைச்செயலாளர் எஸ்.வைஷ்ணவி நந்தன் ஆகியோர்களிடம் கொடுத்து, சாதனைகளுக்கான பதக்கங்களை அணிவித்து. கௌரவித்துப் பாராட்டினார்கள்.