fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரியில் எலும்பு, மூட்டு தின விழா

சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரியில் எலும்பு, மூட்டு தின விழா

கடலூர் மாவட்டம் -சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய எலும்பு மற் றும் மூட்டு தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் சி.திருப்பதி தலைமை வகித்துப்பேசியதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழும்,எலும்பு முறிவு, தண்டுவட அறுவைச் சிகிச்சை, இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகள் கட்டணமின்றி செய்யப் படுவதை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்தாண்டு இந்தத் திட்டங் களின் கீழ், எலும்பியல் துறையின் அறுவைச் சிகிச்சை மூலமாக 650-க்கும் மேற்பட்ட நோயாளி கள் பயனுடைந்துள்ளனர் என்றார்.

விழாவில் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், துணை முதல்வர் பாலாஜி சுவாமிநாதன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் பேசினர். நிகழ்ச்சியை எலும்பியல் துறைத் தலைவர் செந்தில்நாதன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

விழாவில் மருத்துவர்கள் தனபால்சிங், துணை பேராசிரியர்கள் பிரபாகர், மணிகண்டராஜன், பரசுராமன், குருமூர்த்தி, ஆனந்தகுமார், பத்மராஜன் மற்றும் மேற்படிப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img