அழகப்பா கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச சமூக நல மருத்துவ முகாம் நேற்று துவங்கப்பட்டது. கல்விச் சேவையைத் தொடர்ந்து மருத்துவச் சேவையிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கும் முயற்சியாக இந்த முகாம் அமைந்துள் ளது.
தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, நீதியரசர் மு.சொக்கலிங்கம், முன் னாள் ராமச்சந்திரா மருத் துவக் கல்வி நிறுவன துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என். மூர்த்தி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ரவி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
அழகப்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராமநாதன் வைரவன், கல்விக்குப் பிறகு மருத்துவச் சேவையிலும் சமூகப் பணியை விரிவுபடுத்துகிறோம், என்றார்.
முகாமில் பல்வேறு பரிசோதனை, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை, உடல்நல விழிப்புணர்வு மற்றும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.



