Homeபிற செய்திகள்இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் எம். யுவராஜா 43 வது பிறந்தநாள் விழா ஈரோடு மத்திய மாவட்ட இளைஞரணி சார்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 275 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் நடைபெற்ற இரத்ததான முகாமில் 200க்கும் மேற் பட்டோர் பங்கு பெற்று ரத்ததானம் செய்தனர்.

பிறகு வேளாளர் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை 200க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டது.

இறுதியாக 500ககும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கல் லூரியின் தாளாளர் எஸ். டி.சந்திரசேகர், முதல்வர் எம். ஜெயராமன், புல முதல்வர் திரு.பி. ஜெயச்சந் தர், நிர்வாக மேலாளர் திரு.என். பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img