நெய்வேலி என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை, என்.எல்.சி. கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நெய்வேலியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் என்.எல்.சி இந்தியா நிறுவன மனிதவளத்துறை இயக்குனர் சமீர்ஸ்வரூப் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் நெய்வேலி பள்ளிகளை சேர்ந்த மாணவ-, மாணவிகள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியானது என்.எல்.சி மத்திய நூலகத்தில் இருந்து புறப்பட்டு,முக்கிய வீதிகள் வழியாக சென்று மெயின் பஜாரில் உள்ள காந்தி சிலை அருகில் முடிவடைந்தது.
இதில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல் லாஹ், என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார்,கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பொது மேலாளர் பிரபாகரன்,என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை டாக் டர் விஜயகுமாரி, நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவ-, மாணவிகள் கலந்து கொண்டனர்.