ஃபெனிஸ்டா கோவை சாய்பாபா காலனியில் ஒரு புதிய பிரத்யேக ஷோரூமை தொடங்கியிருக்கிறது. சங்கர் டிம்பர்மார்ட் என்ற நிறுவனத்தால், நிர்வகிக்கப்படும் இந்த நவீன ரீடெய்ல் அமை விடம், எண். 178-சி, மேட்டுப்பாளையம்சாலை, கோயம்புத்தூர் – 641043 என்ற இடத்தில் அமைந்திருக்கிறது.
தென்னிந்தியாவில் உயர் செயல்திறன் மிக்க கதவுகள் மற்றும் ஜன்னல் களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்த ஷோரூம் சிறப்பான பங்காற்றும். இந்த ஷோரூமின் தொடக்க விழா நிகழ்வில் சங்கர்- அசோஸியேட்ஸ் கட்டுமான நிறுவனத்தின் தலைமை கட்டிடக்கலை நிபுணர் ரமணி சங்கர், தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
ஃபெனிஸ்டாவின் புதிய ஷோரூம், வாடிக்கையா ளர்களுக்கு பிரமிக்கத்தக்க அனுபவத்தை வழங்குவதற் கென பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்டிருக் கிறது. அதிக செயல்திறன் மிக்க யு.பி.வி.சி மற்றும் அலுமினியத்திலான ஜன்னல்கள் மற்றும் கதவுகள், திடமான பேனல் டோர்கள் மற்றும் புதிதாக அறிமுகம் செய் யப்பட்டுள்ள கட்டிட முகப்புகள் ஆகியவற்றின் விரிவானத் தொகுப்பு இந்த ஷோரூமில் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்புதிய ஷோரூம், தென்னிந்தியாவில் ஃபெனிஸ்டாவின் விரிவாக்க செயல் உத்தியில் ஒரு முக்கியமான மைல் கல்லைக் குறிக்கிறது.
நவீன இந்திய இல்லங்களின் மாறி வருகின்ற மற்றும் அதிகரித்து வருகின்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேம்பட்ட வடிவமைப்பு, நீண்டகால நிலைப்புத்தன்மை மற்றும் ஆற்றலை சேமிக்கும் தீர்வுகள் மீது ஃபெனிஸ்டா பிராண்டு கொண்டிருக்கும் அக்கறையையும், சிறப்பு கவனத்தையும் இந்த ரீடெய்ல் ஷோரூம் பிரதிபலிக்கிறது.
இது குறித்து ஃபெனிஸ் டாவின் பிசினஸ் ஹெட் சாகெத் ஜெயின் பேசுகையில், “கோயம்புத்தூரில் இந்த புதிய ஷோரூமை தொடங்கியிருப்பதன் வழியாக தமிழ்நாட்டில் எமது இருப்பினை விரிவுபடுத்துவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம்” என்றார்.