fbpx
Homeபிற செய்திகள்நாட்டுபுற கலைஞர்கள் நல சங்க மாநில செயற்குழு கூட்டம்

நாட்டுபுற கலைஞர்கள் நல சங்க மாநில செயற்குழு கூட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில நல சங்கம் (விழுப்புரம்) சார்பில் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மாநிலத் தலைவர் சத்தியராஜ் தலைமை வைத்தார். மாநில செயலாளர் குப்புசாமி முன்னிலை வகிக்க, மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஆதிமூலம் கருத்துரை வழங்கினார்.

இதில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு பேருந்துகள் செல்வதற்கு பாதி கட்டணம் சலுகை வழங்கப்பட்டுள்ளதற்கும் அனைத்து நாட்டுபுற கலைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

60 வயதான அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரையும் வாரியத்தில் இணைக்க வேண்டும்.

புதிய நாட்டுப்புற கலைஞர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும், நல வாரிய அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அனைத்து செலவுகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இறுதியில் தர்மபுரி மாவட்ட மேற்கு மாவட்ட தலைவர் மாதப்பன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img