கடலூரில் ரூ.8.5 கோடியில் மீன் அருங்காட்சியகம், சில்வர் பீச்சை மேம்படுத்தும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
கடலூர் தேவனாம்பட் டினம் சில்வர் பீச்சில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் கடற்கரையை மேம் படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். விஷ்ணு பிரசாத் எம்.பி., அய்யப்பன் எம்.எல்.ஏ. மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக கடலூர் மாநகராட்சி பூங்கா அருகில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக மீன் அருங்காட்சியகம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியதாவது:
கடலூர் மாநகராட்சியில் உள்ள சுப்பராயலு பூங்காவில் பல்வேறு வகையான மீன் வகைகளை பார்வையிடவும், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காகவும் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
சுப்புராயலு பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகரித்தி டும் வகையிலும், சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டுவரும் வகையிலும் ரூ.75லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலூர் சில்வர் பீச்சை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு அனைத்து அம்சங்களையும் மேம்படுத்திடவும் நீலக் கொடி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பில் உட்காரும் குடை, உட்காரும் மூங்கில் இடம், வாட்ச் டவர், மணல் சுத்தம் செய்யும் எந்திரம்,ஜாக்கிங் டிராக், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு எந் திரம், மூங்கில் வீட்டு உறை, கம்பங்களுடன் கூடிய எல்.இ.டி. விளக்கு, கண்காணிப்பு கேமராக்கள், கடற்கரை வரைபடம், தகவல் காட்சிப் பலகை உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் சீல்வர் பீச்சை மேம் படுத்தும் பணி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், ஆணையாளர் அனு, செயற்பொறியாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



