fbpx
Homeபிற செய்திகள்கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் தள்ளுபடி விலையில் கண்காட்சி விற்பனை கோவை மண்டல மேலாளர் அம்சவேணி தகவல்

கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் தள்ளுபடி விலையில் கண்காட்சி விற்பனை கோவை மண்டல மேலாளர் அம்சவேணி தகவல்

கோவை மண்டல கோ ஆப்டெக்ஸ் ஷோரூம்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. ஊட்டி கோ ஆப்டெக்ஸ் ஷோரூமில் நடந்த விழாவில் தள்ளுபடி விற்பனையை கோவை மண்டல மேலாளர் ப.அம்சவேணி துவக்கி வைத்தார்.

விழாவில் முதுநிலை மேலாளர் (ரகம் மற்றும் உற்பத்தி) கோ.ஜெகநாதன், ஊட்டி விற்பனை மேலாளர் எஸ்.சபினா நாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக கோஆப்டெக்ஸ் கோவை மண்டல மேலாளர் ப.அம் சவேணி கூறியதாவது:

89 வருட பாரம்பரிய மிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு பொருட்களின் விலையில் மூன்று பொருட்கள் ஒரு விதத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத் தள்ளுபடி விலையில் கண்காட்சி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தள்ளுபடி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படு கிறது. இரண்டு பொருட்களின் விலையில் மூன்று பொருட்கள் சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டுச் சேலைகள், மென் பட்டு சேலைகள் காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் இரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான ரெடிமேட் சட்டைகள் என ஏராளமாக வரவழைக்கப் பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும். மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300லிருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால் 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். சேமிப்புத்திட்ட வாடிக்கையாளர்கள் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img