fbpx
Homeபிற செய்திகள்கே.எம்.சி.ஹெச்-ல் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு இலவச ஆலோசனை, சலுகைக் கட்டணத்தில் பரிசோதனை

கே.எம்.சி.ஹெச்-ல் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு இலவச ஆலோசனை, சலுகைக் கட்டணத்தில் பரிசோதனை

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கர்பப்பை வாய் புற்று நோய்க்கு இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், சலுகைக்கட்டணத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

கர்பப்பை வாய் புற்றுநோய், இந்தியப் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ‘ஹூயூமன் பாப்பிலோமா’ வைரஸ் மூலம் பரவுகிறது. 10-15 சதவீதம் பெண்களுக்கு இது புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வைரஸ் தொற்றுக்கு எந்த அறிகுறியும் கிடையாது. குறிப்பிட்ட காலத்தில், பரிசோதனை மட்டும் தான் இத்தொற்றை கண்டறிய உதவும்.

பரிசோதனைகள் மற்றும் தகுந்த சிகிச்சை மூலம் வைரஸ் தொற்றை குணப்படுத்தி புற்றுநோயை தடுக்கலாம். பேப் ஸ்மியர், அதிநவீன எச்.பி.வி., பரிசோதனை ஆகிய இருவகையான பரிசோதனை முறைகள் உள்ளன. பேப் ஸ்மியர் முறையில் துல்லியத்தன்மை, 60 – 70 சதவீதம் இருக்கும். எச்.பி.வி., பரிசோதனையின் துல்லியத் தன்மை பல மடங்கு அதிகம். இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாது என்பதை துல்லியமாகக் கூற முடியும்.

விழிப்புணர்வு இதுகுறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கே.எம். சி.ஹெச் மருத்துவமனை (அவிநாசி ரோடு) கர்பப்பை வாய் பரிசோதனை முகாமை 18.1.2024 முதல் 17.2.2024 வரை நடத்த உள்ளது. இம்முகாமில் பரிசோதனை சலுகை கட்டணத் தில் செய்யப்படுகிறது. மேலும் கர்பப்பை வாய் புற்று நோய் சிகிச்சை நிபுணரின் ஆலோ சனை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங் களுக்கு 87548 87568 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img