fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி முதல் பட்ட வகுப்பை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி முதல் பட்ட வகுப்பை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

ஈரோடு அருகே புதிதாக துவக்கப்பட்ட 300 படுக்கைகள் கொண்ட நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல் பட்ட வகுப்புகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சனிக்கிழமை துவக்கி வைத்தார்.

இது நந்தா கல்வி அறக் கட்டளையின் 21வது நிறுவனம் மற்றும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
25000 சதுர அடி குளிரூட்டப்பட்ட நூலகம், தங்கும் விடுதிகள், நவீன ஆய்வகங்கள் மற்றும் மாநாட்டு கூடம் போன்றவை உள்ளன. விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், கல்லூரி பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சேவை மற்றும் தரமான கல்வியை விரிவுபடுத்தும் என்று உறுதி அளித்தார்.

கொரோனா காலத்தில் மக்கள் பட்ட துயரங்களை நினைவு கூர்ந்த அவர், அந்த நேரத்தில் அனைவருக்கும் உரிய உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டார். கட்சியின் தொண்டர்கள் பொதுமக்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினர்.

இதுபோன்ற கல்லூரிகள் அப்போது செயல்பட்டிருந்தால், பொதுமக்கள் அதிக பயன் பெற்றி ருக்க முடியும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடு கையில், தமிழகம் மருத்துவ சேவையில் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் உள்ளிட்ட அரசின் சுகாதார சேவைகளை கோடிட்டுக் காட்டினார்.

நந்தா கல்லூரி தலைவர் வி.சண்முகன், செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, கல்லூரி டீன் டாக்டர் ஏ சந்திரபோஸ், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வி சுந்தரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img