ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பில் இறுதியாண்டு பயின்று வெளியேறும், இயந்திரவியல் மற்றும் இரசாயன பொறியியல் மாணவர்களுக்கென, தூத்துக்குடியில் இயங்கி வரும் உரம் மற்றும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஸ்பிக் நிறுவனமானது தனது வளாகத்தேர்வினை நடத்தியது.
துவக்க நிகழ்ச்சிக்கு “ஸ்பிக்“ நிறுவனத்தின் மனிதவள மூத்த மேலாளர் எஸ்.இசக்கியப்பன் மற்றும் துணை மேலாளர் டி.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சுமார் 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணி நியமனத்திற்கான உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
நந்தா அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன், செயலாளர்கள் எஸ்.நந்தாகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, கல்லூரிகளின் முதல்வர்கள் யு.எஸ். ரகுபதி, ச.நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



