நாமக்கல் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை வைத்து பலரும் தொழில் புரியும் நிலையில்,டீசல் விலை மற்றும் உதிரி பாகங்கள் விலை, புதிய வாகன விலை உயர்வு, இன்சூரன்ஸ் ,சாலை வரி உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக வாடகை தீர்வுக்காக அனைத்து ஜேசிபி உரிமையாளர்களும் மே 29 வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாடகை உயர்வை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் (வியாழன் /வெள்ளி/ சனி) 3 நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் -திருச்செங்கோடு சாலை, நல்லிபாளையம் பைபாஸ் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து வாடகை உயர்த்தப்பட்டதை கோஷங்களாக எழுப்பினர்.
இனி நாமக்கல் பகுதியில் ஜேசிபி வாகனங்களை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2500 குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் கரண்ட் கம்பம் நடுவதற்கு (மினிமம் மூன்று கம்பம்) ரூ1500 நிர்ணயம் செய்ய வேண்டும் இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது என ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு வண்டிக்கு 5000 ரூபாய் இழப்பு ஏற்படும் என்று வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.