தமிழக அரசால் அங் கீகரிக்கப்பட்ட சங்கமும் நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க சங்கமுமான தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஈரோடு மாவட்ட தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது,
இத்தேர்தலில் கருவூலம் மற்றும் கணக்கு துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட அச்சங்கத்தின் தற்போதய மாநில துணைத்தலைவர் அ.ரவிச்சந்திரன்
தேர்தலில் அதிகப்படியான ஓட்டுகள் பெற்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஈரோடு மாவட்ட தலை வராக பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் நேற்று மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கராவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருடன் மாவட்ட செயலாளர் வி.எம் . வெங்கிடுசாமி, மத்திய செயற்குழு உறுப்பினர் க.வெங்கடேசன் துணை தலைவர் (மகளிர் )மா.செல்வராணி துணை தலைவர் ( மகளிர்) அ.ராதா, பிரச்சார செயலாளர் டி.தேவகுமார் , இணைச் செயலாளர் வெ.ருத்தமூர்த்தி , இணைச் செயலார் ர.பிரகாஷ், ஈரோடு வட்ட கிளை செயலாளர் ர.பிரபாகரன், கருவூல துறையை சார்ந்த ராம்குமார், தெய்வம், சுமன், பொதுப்பணித் துறையை சார்ந்த க.மலர் கொடி, ப.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.