கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செல்வபுரம், ஐடியுபி காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை இணை செயலாளர்/ நிர்வாக இயக்குநர் குல்திப் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண் இயக்குநர் சங்கர், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, நிர்வாக பொறியாளர் ஜெகநாதன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ரமேஷ் சுதர்சன், கருப்புசாமி, வெங்கட், உதவி பொறியாளர் கவிதா மற்றும் குடியிருப்பு நல சங்கத் தலைவர் உட்பட பலர் உடனிருந்தனர்.