கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், நவஇந்தியா, பாரதி காலனி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி 67 சதவீத பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் 33 சதவீத பங்களிப்புடன் என மொத்தம் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் 332 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்கள்.
உடன் மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், உதவி ஆணையர் (பொ) நூர் அகமது, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளனர்.