ஈரோடு ஏர் ரைபிள் பெஞ்ச் ரெஸ்ட் சங்கம் திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி மற்றும் டெக்னாலஜி விளையாட்டு மைதானத்தில் ஜூன் 28 துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் மற்றும் ஜூன் 29 பெஞ்ச் ரெஸ்ட் துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தியது.
இவ்விழாவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கொமதேக இளைஞர் அணி பொதுச் செயலாளர் சூரியமூர்த்தி மற்றும் பெருந்துறை அரசு வழக்கறிஞர் திருமலை முன்னிலை வகித்தனர். ஈரோடு சட்டக் கல்லூரி இணை செயலாளர் அருண்பாலாஜி துவக்கி வைத்தார்.
சங்க முக்கிய உறுப்பினர்கள் டாக்டர்கள் ஐயப்பன், குமாரசாமி, சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி. அரச்சலூர் மகேஷ், திரு.மனோகரன், டாக்டர் பிரகாஷ், மோகன், பழனி ஆண்டவர் கன்சல்டன்சி தினேஷ். வினோத், மொபைல் பார்க் பரணி, டிட்டோபாபு, மாயாவெங்கடேஷ், நாவலன். வாசு, சௌத்ரி, பிரனேஷ், பெஞ்ச் ரெஸ்ட் மாநில துணைத் தலைவர் ராஜா சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கினர். போட்டியை சங்க தலைவரும் உடற்கல்வி இயக்குனருமான தேவகாந்தன் மற்றும் பொதுச் செயலாளர் மணிகண்டன் இணைந்து நடத்தினர்.



