fbpx
Homeபிற செய்திகள்தொழில் நிறுவனங்களுக்கான ஆற்றல் சிக்கன விழிப்புணர்வு முகாம்

தொழில் நிறுவனங்களுக்கான ஆற்றல் சிக்கன விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எரிபொருள் மற்றும் ஆற்றல் சேமிப்புக்கான புதிய தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆற்றல் தணிக்கை மற்றும் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ஆற்றல் தணிக்கை மேம்பாடு மற்றும் ஆற்றல் சிக்கன விழிப்புணர்வு முகாம் தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டியில் உள்ள மாவட்ட தொழில் மைய வளாக கூட்டரங்கில் நடந்தது.

சிக்கனம்

இந்த முகாமுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன் தலைமை தாங்கினார். ஆற்றல் தணிக்கையாளர் சிவராசு, தர்மபுரி மின் பகிர்மான அலுவலக மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், உதவி பொறியாளர் சண்முகப்பிரியா ஆகியோர் பேசுகையில், போட்டிகள் நிறைந்த சூழலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, மின்சாரம் உள்ளிட்டவற்றில் சிக்கனம் பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என்று கூறினர்.

இது தொடர்பாக இந்த முகாமில் விவாதிக்கப்பட்டது. இந்த முகாமில் தர்மபுரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பாபு, கடகத்தூர் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் சங்க தலைவர் சரவணன் மற்றும் ஏராளமான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தொழில் ஊக்குவிப்பாளர் வெங்கடேஸ்வரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img