fbpx
Homeபிற செய்திகள்கர்நாடகா, கேரளா காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு: நீலகிரி எஸ்.பி. ஆலோசனை

கர்நாடகா, கேரளா காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு: நீலகிரி எஸ்.பி. ஆலோசனை

நீலகிரி மாவட்டம், கேரளா மற்றும் கர் நாடக எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்த மாநிலங்களிடம் தன் எல்லையை நீலகிரி மாவட்டம் பகிர்கின்றது. எனவே அந்த மாநி லங்களுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றங்கள் முக்கியமாகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். கி.பிரபாகர் தலைமையில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாம்ராஜ் நகர் பகுதிகளை சேர்ந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகா ரிகளுடன் சந்திப்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதில் மாவோயிஸ்ட் நடமாட்டங்கள் எல்லை தாண்டி வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்வது குறித்த பல தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img