fbpx
Homeபிற செய்திகள்தொழில் நுட்பத்தில் பாலினச் சமநிலை நுண்ணிய வன்முறை - கருத்தரங்கு

தொழில் நுட்பத்தில் பாலினச் சமநிலை நுண்ணிய வன்முறை – கருத்தரங்கு

கோவை கே.எம்.சி.எச். மருந்தியல் கல்லூரி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் பாலினச் சமநிலை மற்றும் கிராமப்புற பகுதிகளில் பாலின சமநிலை மற்றும் நுண்ணிய வன்முறை என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கை மகளிர் பயில்வுகள் துறை , பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியது.

கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.நல்லா ஜி பழனிசாமி மற்றும் கோவை மருத்துவ மையம், ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி டி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாநில பல்கலைக்கழக பெண்கள், பாலினம் மற்றும் பாலியல் ஆய்வுகள் துறை பேராசிரியர் முனைவர் சூசன் சாவ், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இவ்விழாவில், முனைவர் லாரா பல்லர்ஸ் அம்மனிரோ (புவியியல் துறை, சாண்டியாகோ டி காம்போஸ்ட்டேளா பல்கலைக்கழ கம்), முனைவர் சாண்டோஸ் சொல்லா ஸோஸ் மனுவேல் (புவியியல் துறை, சாண்டியாகோ டிகாம்போஸ்ட்டேளா பல்கலைக் கழகம்) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சர்வதேச கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கேஎம்சிஎச் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஏ.ராஜசேகரன் வரவேற்றுப் பேசினார். தலைமை விருந்தினர் மற்றும் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார்.

டாக்டர் நல்ல ஜி பழனிசாமி பேசுகையில், பெண்கள் தைரியமாக முன்வரவும், அவர்கள் விரும்பும் துறைகளில் வெற்றிபெறவும் ஊக்குவித்தார். அதைத் தொடர்ந்து டாக்டர் தவமணி டி பழனிசாமி பேசுகையில், “சக்தி வாய்ந்த வார்த்தைகள் சக்தி வாய்ந்த பெண்ணிடமிருந்து வருகின்றன” என்ற வாக்கியத்தை கூறி கலந்துகொண்ட அனைவரையும் ஊக்குவித்தார் .

இதன் தொடர்ச்சியாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத் துறை இணைப் பேராசிரியை டி.ஆர்.கமலவேணி பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதன்பின் தலைமை விருந்தினர் சூசன் எம் ஷாவு பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பல்வேறு தடைகள் பற்றி பேசினார்.

அதன்பின் முனைவர் லாரா பல்லர்ஸ் அம்மனிரோ பேசுகையில் நுண்ணிய வன்முறை மீதான சர்வதேச கண்ணோட்டங்கள் என்ற தலைப்பில் தனது எண்ணங்களையும் யோசனை களையும் பகிர்ந்துகொண்டார். உலகப் பார்வையில் கிராமப்புறப் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி சாண்டோஸ் சொல்லா ஸோஸ் மனுவேல் பேசினார்.

துணை முதல்வர் டாக்டர் கே.சுரேஷ்குமார் நன்றி கூறினார். இணைப் பேராசிரியரும் கருத்தரங்கு அமைப்புச் செயலாளருமான டாக்டர்.கே.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கருத்தரங்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img