முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தி நிறுவனமான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப தின விழா நடைபெற்றது.
உமிழ்வை குறைப்பதற்கும், வாடிக்கையாளர்களின் போட்டி தன்மையை மேம்படுத்துவதற்கும் ஆற்றல் திறனுள்ள தீர்வுகளை எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவ னம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதேநேரத்தில் எதிர்கால தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான உறுதியையும் தொழில்நுட்ப தின விழா வில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் மேற்கொள்கிறது.
தொழில்நுட்ப தின விழா நிகழ்ச்சியில் 200க்கும் மேற் பட்ட ஊழியர்கள், தொழில் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும், . தொழில்நுட்ப குழுவின் பங்களிப்புகள், சிக்கலான பொறியியல் சாதனைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அறிவு-பகிர்வு அமர்வுகள், புதிய தயாரிப்பு ஆகியவை விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது.
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் சார்ந்த கூடுதல் தகவல்களை www.elgi.com என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



