fbpx
Homeபிற செய்திகள்சமூக பங்குச் சந்தை: முதல் பட்டியலை வெளியிட்டது- எஸ்ஜிபிஎஸ் உன்னாடி அறக்கட்டளை

சமூக பங்குச் சந்தை: முதல் பட்டியலை வெளியிட்டது- எஸ்ஜிபிஎஸ் உன்னாடி அறக்கட்டளை

இந்திய தேசிய பங்குச் சந்தை துவங்கியுள்ள சமூகப் பங்குச் சந்தையில் கடந்த 13ம் தேதி எஸ்ஜிபிஎஸ் உன்னாடி அறக்கட்டளை முதல் நிறுவனமாக நுழைந்து தனது பட்டியலை வெளி யிட்டது.

இந்நிகழ்ச்சி என்எஸ்இ நிறுவனத்தின் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர். எஸ்ஜிபிஎஸ் உன்னாடி வெளியிட்ட முதல் பட்டியலுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி கிடைத்துள்ளது.

இந்த நிதியை பல்வேறு மாநிலங்களில் அரசுக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர் களுக்கு பயிற்சி அளிக்க உன்னாடி அறக்கட்டளை பயன்படுத்த உள்ளது.

இது குறித்து செபியின் சமூகப் பங்குச் சந்தை ஆலோசனைக் குழுத் தலைவர் பாலசுப்ர மணியம் கூறுகையில், “இந்த புதிய பங்கு சந்தை உலக அளவில் சிறந்த பங்கு சந்தையாக மாறு வதை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பு” என்றார்.

என்எஸ்இ நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆஷிஷ்குமார் சவுகான் கூறுகையில், “என்எஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு சந்தைகளில் பொதுமக்களின் பங்கேற்பின் மூலம் நிதி வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

அதேபோல் எங்களின் புதிய சமூகப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் இந்த சமூக தொண்டு நிறுவனங்களின் செயல்பா டுகள் பன்மடங்கு அதி கரிக்கும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img