fbpx
Homeபிற செய்திகள்முதியோர்- மாற்றுத்திறனாளிகள் தபால்வாக்கு: நீலகிரி ஆட்சியர் அருணா ஆய்வு

முதியோர்- மாற்றுத்திறனாளிகள் தபால்வாக்கு: நீலகிரி ஆட்சியர் அருணா ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன் னிட்டு, 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால்வாக்குகள் பெறப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான அருணா நேரில் பார்வையிட்டார்.

இந்நிலையில், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதிற்கும் மேற்பட்ட 796 முதியோர்களும், 981 மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, உதகை ஊராட்சி ஒன்றியம், கெந்தொரை பகுதியில் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் அளித்த தபால் வாக்கினையும், தலைகுந்தா பகுதியில் 2 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த தபால் வாக்குகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, தங்களது வீட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களும் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்குகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை பார்வையிட்டு, மண்டல அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ்கண்ணன், உதகை சட்டமன்ற தொகுதி தபால் வாக்கு பொறுப்பு அலுவலர் மகேந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img