கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எதிர்கால
வளர்ச்சிக்கு மேம்பட்ட மூலப்பொருட்களின் பயன்பாட்டு உத்தி – 2024 என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் இத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். பேச்சாளர்கள் பொருள் அறிவியல், தற்காப்பு உலோகவியல், வேதியியல் பொருட்கள், உயிரி பொறியியல் மற்றும் மின்வேதியியல் ஆராய்ச்சி ஆகியவற்றை ஆராயும் விதமான கருத்துக்களை பரிமாறினர்.
இந்த மாநாடு அறிவுப் பரிமாற்றத்தின் மையமாக மட்டுமல்லாமல், நெட்வொர்க்கிங் மற்றும் இத்துறையில் வல்லுநர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்பாகவும் இருந்தது.
மாநாடு முழுவதும், கல்வித்துறை, தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தொடர்பு மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருந்தது.