fbpx
Homeபிற செய்திகள்வணிக பயன்பாட்டிற்கான 4 புதிய கனரக டிரக்குகள்: ஐச்சர் நிறுவனம் அறிமுகம்

வணிக பயன்பாட்டிற்கான 4 புதிய கனரக டிரக்குகள்: ஐச்சர் நிறுவனம் அறிமுகம்

ஐச்சர் டிரக்ஸ் அன்ட் பஸ்சஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவான விஇ கமர்ஷியல் வெகிகிள்ஸ் நிறுவனம், வேகமாக வளர்ந்து வரும் நீண்ட தூர போக்குவரத்தை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக பல்வேறு மாடல்களில் புதிய கனரக டிரக்குகளை சென்னையில் அறிமுகம் செய்தது.

4 புதிய கனரக டிரக்குகளை உள்ளடக்கிய இந்த மாடல் டிரக் குகள், சக்திவாய்ந்த மற்றும் எரி பொருள் திறன்மிக்க என்ஜின்களைக் கொண்டுள்ளன. இவை தளவாட போக்குவரத்து உரிமையாளர்களுக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சிறந்த இயக்க நேரத்தை வழங்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிப்பர் லாரி பிரிவில் ஐச்சர் ப்ரோ 6019எக்ஸ்பிடி, பொருட்களை கொண்டு செல்லும் லாரி பிரிவில் ஐச்சர் ப்ரோ6048 எக்ஸ்பி, டிராக்டர் டிரக் பிரிவில் ஐச்சர் ப்ரோ6055 எக்ஸ்பி மற்றும் ஐச்சர் ப்ரோ6055 எக்ஸ்பி4ஜ்2 ஆகிய 4 மாடல் கனரக வாகனங்களை ஐச்சர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இவை கனரக, நடுத்தர மற்றும் இலகுரக டிரக்குகள் மற்றும் பஸ்களின் தேவையை பூர்த்தி செய்கின்றன. புதிய மாடல் வாகனங்கள் குறித்து விஇ கமர்ஷியல் வெகிகிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரிவினோத் அகர்வால் கூறுகையில், எங்களின் வாடிக்கையாளர்களின் வர்த்தக வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நம் நாட்டில் தளவாடங்களின் செயல்திறனையும் அதற்கான கட்டணத் தையும் மேம்படுத்துவதில் எங்களின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், புதிய தொழில் தரநிலைகளை அமைக்க 4 மாடல்களில் கனரக வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

எங்களின் அப் டைம் சென்டர் மற்றும் மைஐச்சர் செயலி ஆகியவற்றின் மூலம், இந்த புதிய மாடல் வாகனங்கள் எங்களின் வாடிக் கையாளர்களுக்கு அதிக உற்பத்தி மற்றும் லாபத்தை வழங்கும் என்று தெரிவித்தார்.

இது குறித்து விஇ கமர்ஷியல் வெகி கிள்ஸ் நிறுவனத்தின் டிரக் வர்த்தகப் பிரிவு மூத்த துணைத் தலைவர்ககன்தீப் சிங் கந்தோக் கூறுகையில், நாங்கள் வாடிக்கை யாளர்களுக்கு ஒரு வலிமைமிக்ககனரக மாடல் வாகனங்களை அறிமுகம் செய் துள்ளோம்.

இவை அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களாக உள்ளன. இதன் விளைவாக வாடிக்கையாளர்களின் வர்த்தகம் அதிகரிப்பதோடு அவர்களின் லாபமும் அதிகரிக்கும்.

திய வகை வாகனங்கள் விதி விலக்கான செயல் திறனை உறுதி செய்யும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளன மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் ஆகியவை எங்கள் முழு மையான சேவை தீர்வுகளுடன், அவை வணிகத்திலும் லாபத்திலும் இடைவிடாத வளர்ச்சியை வழங்க தயாராக உள்ளன என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img