fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் ஆல்ஃபா கேர் மருத்துவமனை- டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சென்னையில் ஆல்ஃபா கேர் மருத்துவமனை- டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சென்னையில் ஷாட் ஸ்டே அறுவை சிகிச்சைகளுக்கான பன்முக சிறப்பு மருத்துவமனையாக நிறு வப்பட்டிருக்கும் ஆல்ஃபா கேர் ஹாஸ்பிட்டல்ஸ் தொடங்கப்பட்டிருக்கிறது.

செயல்திறன் மற்றும் மருத்துவ சிகிச்சையின் விளைவுகள் மீது எவ்வித சமரசமின்றி, நோயாளிகள் விரைவாக மீண்டு குணமடைவதில் சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு புதிய யுகத்தை உடல்நல பராமரிப்புத் துறையில் இதன்மூலம் தொடங்கியி ருக்கிறது.

சென்னை மாநகராட்சி யின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலருமான டாக்டர். ஜெ. ராதா கிருஷ்ணன் நேற்று இம் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
உலக வங்கிகள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் செயல்திட்டத்தின் இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் தென்காசி எஸ். ஜவஹர், இம்மருத்துவமனையின் நிறுவனர் – தலைவர் டாக்டர். பாபு நாராயணன் மற்றும் இதன் நிறுவனர் & நிர்வாக இயக்குனர் ஜே.ஏடெல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கவிழாவின் ஒரு அங்கமாக ரூ.299 என்ற சிறப்பு சலுகை விலையில் ஹீமோகுளோபின், இரத்த சர்க்கரை, இரத்த கொலஸ்ட்ரால், தைராய்டு, கல்லீரல் அளவீடுகள் மற்றும் சிறுநீரக அளவீடுகள் ஆகியவை தொடர்பான நோயறிதல் சேவைகள் மற்றும் உடல்நல பரிசோதனை திட்டத்தை நேற்று தொடங்கியது. இன்றும் சேவையை வழங்குகிறது.

40 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனை வளாகத்தை திறந்து வைத்து பேசிய டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், வளர்ச்சியடைந்து வரும் சுகாதாரத் துறையை இதுவொரு புத்தாக்க செயல்பாடு மற்றும் முன்னேற்றம் என நான் நம்புகிறேன்.

குறுகிய கால தங்கியிருப்பு அறுவை சிகிச்சையில் நோயாளி களுக்கு வலி இருக்காது அல்லது மிக குறைவான வலியே இருக்கும்; அறுவை சிகிச்சையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு திரும்பிச் செல்லவும் மற்றும் சுறுசுறுப்பான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் நோயாளிகளால் இயலும்.

இத்தகைய புத்தாக்க முயற்சிகள், தரம் மற்றும் பலரும் பயனடையக் கூடியவாறு எளிய கட்டணம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருக்கும் மருத்துவமனைகள் தொடங்கப்படுவது, இந்தியாவில் உடல்நல பராமரிப்பின் தலைநகரமாக சென்னை திகழும் நிலையில் அதனை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன், என்றார்.

இந்நிகழ்வில் உரையாற் றிய டாக்டர். பாபு நாராயணன் மற்றும் ஜே.ஏடெல் ஆகியோர், சென்னை மாநகரின் கீழ்ப் பாக்கத்தில் ஆல்ஃபா கேர் மருத்துவமனையை நாங்கள் நிறுவியிருக்கிறோம்.

உயிர் காப்பு சிகிச்சை மற்றும் இடையீட்டு சிகிச்சை உட்பட, பல்வேறு மருத்துவ பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் எமது மருத்துவக்குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர், என்று குறிப்பிட்டனர்.

சென்னை மாநகரில் ஒரு புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையாக இயங்கி வந்த ரைட் ஹாஸ் பிட்டல்ஸ்- ஐ ஆல்ஃபா கேர் ஹாஸ்பிட்டல்ஸ் வாங்கி, அதனை ஷாட் ஸ்டே பன்முக சிறப்பு பிரிவு அறுவைசிகிச்சை மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img