Homeபிற செய்திகள்பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் கல்வி கற்க வேண்டும் மாணவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் அறிவுரை

பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் கல்வி கற்க வேண்டும் மாணவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் அறிவுரை

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலை மையில் 136 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:

தமிழக முதல்வர் அடிக்கடி சொல்வார். ஒருவரது வாழ்க் கையில் விலைமதிப்பற்ற செல்வம் கல்வி மட்டுமே. கல்வி செல்வம் ஒன்றே ஒருவரின் வாழ்க்கை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கி உள்ளார்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கின்றார்கள்.

மேலும், அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் வாழ்க்கை பாதையை வெற்றி இலக்கை நோக்கி செலுத்திட வேண்டும். பள்ளி காலம் என்பது அனைவரது வாழ்விலும் இனிமையான காலம் ஆகும். மாணவ, மாணவியர்கள் விளையாட்டுகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். உங்களது பெற்றோர்கள், ஆசிரியர் களை மரியாதையுடன் நடத்திட வேண்டும். இன்றைய தினம் மிதிவண்டிகள் பெறும் மாணவ, மாணவியர்கள் சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்திட வேண்டும். இது போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, நன்றாக கல்வி பயின்று தாங்கள் பயின்ற பள்ளிக்கும், தங்கள் பெற்றோருக்கும், நம் மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்திட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சிங்களாந்தபுரம், வடுகம் மற்றும் பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 136 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, பட்டணம் பேரூராட்சி, மோளப் பாளையத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச் சியில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெக நாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img