fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய நா.கார்த்திக்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய நா.கார்த்திக்

சீரநாயக்கன்பாளையம், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் மைதானத்தில், கோவை மாநகர் மாவட்டம், பாப்பநாயக்கன்புதூர் பகுதி,75 வது வட்ட திமுக சார்பில், கோவை மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ( முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட பொருளாளர் முருகன், பாப்பநாயக்கன் புதூர் பகுதி செயலாளர் பரணி கே.பாக் யராஜ், சாய்பாபா காலனி பகுதிக்கழக செயலாளர் ரவி தகவல் தொழில் நுட்ப துணைச் செயலாளர் தமிழ்மறை மேற்கு மண்டல தலைவர் தெய்வானை வட்டக் கழக செயலாளர் நித்தியானந்தம், பொதுக் குழுக் உறுப்பினர் குப்புசாமி, விவசாய அணி மாவட்டத் தலைவர் சிவராமன், மாமன்ற உறுப்பினர் அங்குலட்சுமி, பகுதி அவைத்தலைவர் சிவானந்தம், வட்ட அவைத்தலைவர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி கோபாலன், பகுதி துணைச் செயலாளர் பொன்ராஜ், பிரதிநிதிகள் கணேசன், சண்முகம், ரவி, வட்டக்கழக துணைச் செயலாளர்கள் பழனியம்மாள், பந்தல் முருகன், வட்டக்கழக பொருளாளர் விஜயகுமார், இளஞர் அணி ஹரிபிரசாத், மாரிசெட்டியார், பன்னீர்செல்வம், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பார்வதி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் விஜயகாந்த், மாணவர் அணி துணை அமைப்பாளர் கோவை ஜகதீஷ்,முனிராஜ்,*பாரதி ராம், பரசுராமன், கணேசன், செல்வராஜ் சுஜாதா, சுசீலா, பழனிச்சாமி, சக்திவேலு, பொன் தர்மராஜ், ஆட்டோ மகேந்திரன், சரவணன், ரவி,சக்தி, அஸ்வின்,விமல், கேசிபி, சரண், பகுதி இளைஞரணி தினேஷ் குமார் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முத்தமிழறிஞர் கலைஞர் வேடமணிந்து திருப்பத்தூர் சமரசம், கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் வேடமணிந்து சேலம் சையத் ஆகியோரும் பங்கேற்று அசத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img