Homeபிற செய்திகள்ஏஜென்டிக் செயற்கை நுண்ணறிவு துறையில்இந்தியாவுடன் கைகோர்க்கும் துபாய்

ஏஜென்டிக் செயற்கை நுண்ணறிவு துறையில்இந்தியாவுடன் கைகோர்க்கும் துபாய்

பெங்களூருவில் துபாய் சேம்பர்ஸ் சார்பில், ஏஜென்டிக் செயற்கை நுண் ணறிவு ஒத்துழைப்பை மேம் படுத்தவும், இந்தியா துபாய் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தவும் 2 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


நாஸ்காம் மற்றும் கர்நாடகா வர்த்தக மற்றும் தொழில் கூட் டமைப்புடன் இந்த ஒப்பந்தங்கள் மேற் கொள் ளப்பட்டன.
துபாய் சேம்பர்ஸ் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி முகமது அலி ரஷீத் லூட்டா கூறுகையில், “இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், கண்டு பிடிப்பாளர்கள் மற் றும் நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகளை உரு வாக் கும்” என்றார்.


2026 ஜூன் நில வரப் படி, துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸில் 85,841 இந்திய நிறுவனங்கள் செயலில் உள்ள உறுப் பினர்களாக உள் ளன. இது ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சியாகும். 2026-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 7,579 புதிய இந்திய நிறுவனங்கள் இணைந் துள்ளன.


2025-ல் துபாயில் இந் தியாவின் நேரடி அந்நிய முதலீடு 2.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2016 முதல் 2025 வரை இந்தியாவில் துபாய் மேற்கொண்ட முதலீடு 9.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததுடன், 55,274 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img